
கோடிமுறை தேவாரம் ஓதுவோம் வாரீர்.
நற்றமிழ் வல்ல ஞானசம்பந்த பெருமான் திருஅவதார தலமாகிய சீர்காழி திருக்கோயில் குடமுழுக்கு (24.05.2023) விழாவினை முன்னிட்டு தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் திருமுன்னிலையில் நீதியரசர் மாண்பமை திரு.மகாதேவன் அவர்கள் ஞானசம்பந்தர் அருளிய எழுகூற்றிருக்கை என்று கவிவண்ணமாக அமைந்துள்ள “ஓருருவாயினை” தேவார திருப்பதிகத்தினை கோடிமுறை ஓதும் பெருந்திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்கள்.
அனைத்துயிர்களும் ‘மண்ணில் நல்ல வண்ணம் இன்புற்று வாழலாம்’ என்னும் பெருமுழக்கத்தோடு அன்பர்கள் சிவனடியார்கள் அனைவரும் இத்திட்டத்தில் இணைந்து தேவாரத்தினை நாளும் இலட்சம் முறை பாராயணம் செய்திட வேண்டுகிறோம். அவ்வாறு செய்தால் 101 நாட்களில் கோடிமுறை ஓதினோம் என்ற திட்டம் இறையருளால் இனிதே நிறைவேறும். ஆதலால் தங்களால் இயன்றவரை பாடி வழிபடவும்.
இத் திருப்பதிகத்தினை ஒருமுறை சொன்னால் திருஞானசம்பந்தர் அருளிய மூன்று திருமுறைகள் முழுவதும் பாடிய பெரும்பயன் உண்டு என்பது சேக்கிழார் திருவாக்காகும். ஆகவே சிவனடியார்கள் அனைவரும் இதில் பங்கேற்கவும். மேலும் உங்கள் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவருக்கும் இத்தகவலை பகிந்து அவர்களும் சிவபுண்ணியம் பெற்றிட வழிவகை செய்திட அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.